Thursday, October 18, 2012

மாவீரர் மாதமும் தமிழ் அடிப்படைவாதிகளும் !!!



இளையராஜா நவம்பர் மாதம் கனடாவில் (நவம்பர் 3) - ரோஜர்ஸ் செண்டரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்...இது கனடாவில் அல்லது முழு நார்த் அமெரிக்காவில் அவரது முதல் இசை கச்சேரி என்று சொல்கிறார்கள்..

அடியேன் இளைய ராஜாவை விட ஏ.ஆர்.ரகுமானை அதிகம் ரசிப்பவன். நான் இசையை ரசிக்க ஆரம்பித்த தொண்ணூறுகளின் இறுதியில் இளையராஜாவின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்து, ரகுமான் கோலோச்சிக்கொண்டிருந்தார்...

இளையராஜாவின் பல பாடல்கள் விருப்பம் என்றாலும் (மூனாவது படிக்கும்போது ஏனென்று தெரியாமல் விரும்பிய ஏதோ..மோஹம்...ஏதோ தாகம் பாடலாகட்டும்...பத்தாவது படிக்கும்போது பக்காவாக மனதில் இறங்கிய பனிவிழும் மலர்வனமாகட்டும்) அவரே பாடும் பாடல்கள் கொஞ்சம் கொலைவெறியை தூண்டுவது என்னவோ உண்மைதான்..முரளி படத்தில் எம்பாட்டு எம்பாட்டு என்று அவர் பாடியபோது வெறுப்பாகி திரையரங்கில் பக்கத்தில் இருந்த ஆளை கடித்து வைத்து அவர் மருத்துவமனை போனதெல்லாம் வேறு கதை)..

ஏ.ஆர்.ரகுமானைப்போல பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தாமல் ஏசுதாஸ், சித்ரா, எஸ்பிபி, அவுங்க யாரும் ப்ரீயா இல்லைன்னாலோ இல்லை எஸ்.பி.பிக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் தானே பாடுவது என்றதொரு குண்டு சட்டியை வைத்து டிங்கிரி டம்பா ஆடிக்கொண்டிருந்ததும் என் விருப்பமின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்...

பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது அவரது தொழில் சம்பந்தமானது என்று எப்படி புறக்கணித்தோமோ அதே போல லண்டனோ பாரீஸோ கனடாவோ அவுஸ்திரேலியாவோ, எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாட்டு கட்டட்டும், டிங்கிரி டம்பா பாடட்டும். குத்தாட்டம் போடட்டும்..யார் வேண்டாம்ங்கறா ?

இது தான் நமது நிலை...(நமதுன்னா, அட அது நான் தாங்க)..

ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் புலம் பெயர் தேசங்களில் இயங்கிவரும் ஏஜெண்டுகள், இது மாவீரர் மாதம், இந்த மாதத்தில் இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், களியாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துவதும், அதை கச்சிதமாக கவ்விக்கொண்ட தமிழக ஏஜெண்டுகள், போலி தமிழ் தேசிய வாதிகள், திடீர் குபீர் புரட்சியாளர்கள், பேசுபுக், ட்விட்டர் போராளிகள், புலம்பெயர் தேசங்களில் இருந்து ஏற்கனவே வாங்கிய காசுக்கும், இனி வரப்போகும் டாலர் பவுண்டுகளுக்கும் கூவுபவர்களும், திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் எதிர்த்து அரசியல் நடத்தும் போராளிகள், நாங்க தான் தமிழர், மீதி பேரெல்லாம் தெலுங்கர், மே 17, 18, 19, 20 என்று எல்லாம் பேன்ஸி நேமில் புரட்சி கட்சி நடத்தும் அமைப்பினர்,   வலியுறுத்துகிறார்கள்...

உண்மை ஒன்று தான். இதன் பின் புலம் இது தான்.

தாயகத்தில் / ஈழத்தில் இப்போது போர் இல்லை. என்ன சொல்லி பணம் வசூலிப்பது ? இப்படியே விட்டால் நாம் பார்ம் அவுட் ஆகிவிடுவோம் என்று பயந்து தான், ஈழக்கனவு, அகண்ட தமிழகம், லெமூரியா கண்டம் என்று அவ்வப்போது அடித்துவிட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இடைத்தரகர் கும்பல் இது போன்ற மொக்கையான புரட்சியை கட்டவிழ்த்து இருக்கிறார்கள்...

ஈழப்போர் நடந்தபோது ஒபசிட்டியில் இருக்கும் பிள்ளைகளை உடற்பயிற்சி கூடத்துக்கு அனுப்பிவிட்டு இணையத்தில் எதாவது போட்டோஷாப் செய்து கம்பேனி நடத்திய இந்த கும்பல், புலம்பெயர் தேசங்களில் வகை வகையான வாகனங்களில் வலம் வரும் இந்த கும்பல், தங்கள் இடைத்தரகர் ஜாப்பை காத்துக்கொள்ள, பொதுமக்களிடம் இருந்தும், வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் பணத்தை அறவிட இது போன்ற உண்ர்வை தூண்டும் வகையான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்.

இனி பணம் / நிதி கேட்டால் இது வரை கொடுத்த நிதிக்கு கணக்கு கேளுங்கள். துடைப்பகட்டையாலோ முறத்தாலோ அடித்து விரட்டுங்கள். இது போன்ற அடிப்படைவாதிகளை மாவீரர் மாதம் முழுவதும் பட்டினி கிடக்க சொல்லுங்கள், பட்டானாக பறந்துவிடுவார்கள்...மிரட்டல் விடுத்தால் அந்த அந்த நாடுகளில் உள்ள காவல் துறையில் சொல்லி நடவடிக்கை எடுங்கள்...

இளையராஜா அல்ல, எந்த ராஜாவும் எந்த ஊரிலும் தொழில் செய்ய - அது மே மாதமாக இருந்தாலும் சரி, ஜூன் மாதமாக இருந்தாலும் சரி, நவம்பர் மாதமாக இருந்தாலும் சரி, உரிமை உண்டு.

டிஸ்கி : நான் மாவீரகளையும் அவர்களின் அளப்பரிய தியாகங்களையும் மதிப்பவன், இடைத்தரகர்களையும், புலிகள் பெயரால் பணம் வசூலித்து சுகமாக வாழுபவர்களையும் வெறுப்பவன்...!!!

3 comments:

Anonymous said...

நான் மாவீரகளையும் அவர்களின் அளப்பரிய தியாகங்களையும் மதிப்பவன், இடைத்தரகர்களையும், புலிகள் பெயரால் பணம் வசூலித்து சுகமாக வாழுபவர்களையும் வெறுப்பவன்:::

good one

வவ்வால் said...

செந்தழல்,

நல்ல கருத்தாக்கம்.

ஈழம் தொடர்பில் மாற்றுக்கருத்தாக ஏதேனும் சொல்லிவிட்டால் தமிழின துரோகின்னு சொல்லிக்கிட்டு ஒரு கூட்டம் வருமே ,எங்கே இன்னும் வரக்காணோம் :-))

இளைய ராஜா நடத்துவதும் ஒரு வணிக நிகழ்வு தான், அவருக்கு வெயிட்டான சன்மானம் இல்லாமல் விமானம் ஏறி இருக்க மாட்டார்.

எனவே அவர் தொழில் முறையாக செய்கிறார், அழைப்பவர்களும் தொழில் முறையில் செய்கிறார். இதில் தமிழை இழுத்துப்போட்டு இந்த நாள்,இந்த மாதம் துக்க அனுசரிக்கனும்னு புதுசாக கிளம்பிட்டாங்க.

இதனைப்பற்றி அதிகம் படிக்காமல் தான் இருந்தேன், நேற்று ஒருத்தர் ,என்ன விவரம் இல்லாமல் இருக்கிங்கன்னு உசுப்பிட்டார் :-))

இதில நடிகை ரோசாவின் கணவர் செலவுமணி எல்லாம் தமிழ் புரட்சி செய்ய கிளம்ப்பி இருப்பதை பார்த்தால் தான் காண்டாவுது.

பாலாற்றில் தடுப்பணைக்கட்டக்கூடாதுன்னு தமிழ்நாட்டில் எல்லாம் குரல் கொடுத்த போது பொத்துனாப்போல இருந்தார் :-))

ஏன்னா பாலாற்றில் தடுப்பணை கட்டியே தீரணும்னு ஆந்திராவில் ரோசா போராட்டம் நடத்துனாங்கோ :-))
----------

ராஜாவும் நிறைய புதுப்பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கார், ஆனால் அவர்களை தொடர்ந்து பயன்ப்படுத்தாமல் நீங்க சொன்ன பழம் பெருச்சாளிகளையே கூப்பிட்டுக்குவார், ஒருவேளை பழைய ஆளுங்களை வேலை வாங்குவது எளிதுன்னு நினைத்திருக்கலாம்.

புது ஆளுங்களை அறிமுகம் செய்வதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கு,

பாடகர்களுக்கான சம்பளமும் இசையமைப்பாளரே ஒரு பேக்கேஜாக தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிவிடுவார், அப்புறம் அவராக பார்த்துக்கொடுப்பது தான் சம்பளம், புதியவர்களுக்கு சம்பளமில்லாமல் பாட வைத்துவிட்டு , மொத்த பணத்தையும் இசை அமைப்பாளர் அமுக்கிடுவார்.

அதனால் தான் நிறைய பாடகர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் இப்போதெல்லாம்.

இதான் இப்போதைய டிரென்ட்.

Unknown said...

நீங்க சொல்லுறது சரிதான் தல