Monday, November 06, 2006

ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் 1

என் பெயர் குமார்..என் காதல் கதையை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன்...என் பள்ளிப் படிப்பு முடிந்தது...கல்லூரிக்கான தேடல் ஆரம்பமாயிற்று...என் மதிப்பெண் அவ்வளவு அதிகமில்லை...சராசரி தான்...இடம் கிடைத்தது திருச்சிக்கருகில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி...

கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிப் பருவத்தில் கல்லூரியைப் பற்றி பல கனவுகள் கண்டிருந்தேன்...அவை யாவும் நிறைவேறப்போகும் ஆவலில் நெஞ்சம் நிறைந்த படபடப்புடன் முதல் நாள் கல்லூரி விடுதியில்....

நண்பர் அறிமுகம் எல்லாம் முடிந்தது...பல ஊர்களில் இருந்து இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் வந்திருந்தார்கள்...

கல்லூரி வகுப்புகள் ஆரம்பமாயின...அனைத்து சுகந்திரங்களும் ஒருசேர கைகளில்...

நினைத்த நேரம் சினிமா...அவ்வப்போது வகுப்பு...பல சிறகுகள் முளைத்தது போல் இருந்தது...

எங்கள் கல்லூரியில் இருந்து விடுதி அரை கிலோமீட்டர் தூரம் அமைந்திருந்தது...நடந்துதான் செல்ல வேண்டும்...

கல்லூரிக்கு அருகில் ஒரு பள்ளியும் அமைந்திருந்தது....முற்றிலும் மாணவிகள் படிக்கக் கூடிய பள்ளி....

மாலை கல்லூரி முடிந்ததும் அந்த பள்ளிக்கருகில் இருந்த ஒரு குட்டிச்சுவர் தான் மிக உதவியாக இருந்தது...அதில் அமர்ந்து கொண்டு போகும் வரும் இளம் சிட்டுக்களைப் பார்ப்பது....பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் மாணவிகள், வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைகள் போல் தோன்றினார்கள்...

அந்த தேவதைகளில் ஒன்றுதான் என் இதய ராணியாக பின்னாளில் ஆகிய திவ்யா...

ஆடம்பரமான உடை அணிவதில்லை அவள்...சராசரி உயரம்...சொல்லப்போனால் சற்று குள்ளம்...நீள கருங் கூந்தல்...பார்ப்பவரின் இதயத்தினை ஊடுருவும் கண்கள்....குத்தீட்டி போல் அமைந்த புருவம்.....செந்நிற சிறிய உதடுகள்.....

நளினமாக நடக்கும் நடை...பேசுகிறாளா இல்லையா என்பது போல மெல்லிய குரல்...

இது தான் திவ்யா...

நான் பெண்களிடம் அதிகம் பேசுவது கிடையாது...ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்த திவ்யா, பிறகு என் உள்ளத்தினை கொள்ளை கொண்டாள்...

அவளைப் பார்க்காத நாட்கள் , எனக்கு நாட்களாகவே தோன்றவில்லை....அவளை மீண்டும் காணும்வரை, வலி நிறைந்ததாக மாறின...

அவளிடம் நான் முதல் முதலாக பேசும் தருணம் வாய்த்தது...அந்த நாள்....

..காதல் பயணம் தொடரும்..

12 comments:

லக்கிலுக் said...

//..காதல் பயணம் தொடரும்..//

ஹலோ... எங்க தடாலடியார் கவுதமுக்கு போட்டியா?

நடக்கட்டும்... நடக்கட்டும்....

ரவி said...

தலைக்கு போட்டியாவெல்லாம் இல்லை, நிலா முற்றத்தில் எழுதியது..ஏழு அத்தியாயங்களுடன் நிக்குது...இங்கே போட்டுவிட்டு மீதியை எழுதி முடிக்கலாம் என்று எண்ணம்.

கார்மேகராஜா said...

பெயர் மாற்றப்பட்டுள்ளதே!
இது உங்கள் வாழ்வில் நடந்த கதை இல்லையா?

சத்தியா said...

ஆஹா!... கதை இங்கே ஆரம்பமாச்சா?
ம்...இங்காவது முடிவு வரும் தானே ரவி?
முடிவு பார்க்க வாறேன். ஓகே?

Anu said...

Ravi..idhu sondha kadaiya..illa karpani mattume va..
any way continue pannunga..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"அவளைப் பார்க்காத நாட்கள் , எனக்கு நாட்களாகவே தோன்றவில்லை....அவளை மீண்டும் காணும்வரை, வலி நிறைந்ததாக மாறின..."

ரவி!
இது காதல் வியாதியின் அறிகுறிதான்!!! உங்களதா??,
சரி சொல்லுங்க???
யோகன் பாரிஸ்

ரவி said...

///பெயர் மாற்றப்பட்டுள்ளதே!
இது உங்கள் வாழ்வில் நடந்த கதை இல்லையா?///

அதை எப்படி சொல்லமுடியும் !!! :)

ரவி said...

///ஆஹா!... கதை இங்கே ஆரம்பமாச்சா?
ம்...இங்காவது முடிவு வரும் தானே ரவி?
முடிவு பார்க்க வாறேன். ஓகே? ///

முடித்துவிடலாம் சத்தியா, வெயிட் !!!

ரவி said...

/////ரவி!
இது காதல் வியாதியின் அறிகுறிதான்!!! உங்களதா??,
சரி சொல்லுங்க???
யோகன் பாரிஸ் .../////

யோகன் அவர்களே !!! இந்த வியாதி வராத ஆட்கள் உண்டோ ??

என்னோடதுன்னு நான் சொல்லவே இல்லையே !!!!

ரவி said...

வாங்க அனிதா !!!!

நீங்க கேட்கும் கேள்விக்கு பதில் இப்போதே சொல்லமுடியாது..:)))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னங்க எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் ஆரம்பித்திருக்கீங்க? கதையைப் போலவே காதலும் பாஸ்டா இருக்குமான்னு பார்க்கிறேன்.

Anonymous said...

Ravi, Its Realllllllly Cool.